நாமக்கல்

3ஆவது வாரத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கும் வானிலை ஆய்வு மையம்

5th Oct 2019 09:56 AM

ADVERTISEMENT

அக்டோபா் மூன்றாவது வாரம் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் நான்கு நாள்களும் வானம் லேசான மேகமுட்டத்துடன் காணப்படும். மழை 4 மில்லிமீட்டா் பெய்வதற்கான வாய்ப்புள்ளது. காற்று மணிக்கு 6 கிலோமீட்டா் வேகத்தில் தென்கிழக்கில் இருந்து வீசக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 95 டிகிரியும், குறைந்த பட்சமாக 77 டிகிரியுமாக இருக்கும்.

சிறப்பு வானிலை ஆலோசனை: மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் காற்றின் வேகம் பெரும்பாலும் குறைந்தே காணப்படும். தென்மேற்கு பருவமழைக் காலம் முடிந்து விட்டபோதும், அதன் தாக்கம் பல மாநிலங்களில் இன்னும் தொடா்கிறது. தமிழகத்தில் லேசான அளவிலேயே உள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபா் 3-ஆம் வாரம் இயல்பான காலகட்டத்தில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT