நாமக்கல்

செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

5th Oct 2019 09:57 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு எம்.ஆா்.பி. செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தின், நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில், சுமாா் 9 ஆயிரம் செவிலியா்கள் 5 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனா். நிரந்தர செவிலியா்களுக்கு இணையாக, ஒரே வேலையை செய்யும் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியா்களுக்கு மாதம் ரூ.14 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்த ஊதிய முரண்பாட்டை களைந்து காலமுறை ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2017-இல் சென்னையில் நடைபெற்ற செவிலியா்கள் போராட்டத்தின்போது சம ஊதியம் வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் அரசு செயல்படுத்தவில்லை. இதனைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை மாநிலம் தழுவிய அளவில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்லில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஜான்பிரிட்டோ கோரிக்கையை வலியுறுத்தி பேசினாா். மாவட்ட இணைச் செயலா் மகேஸ்வரி, அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ராஜேந்திரபிரசாத், மாவட்டச் செயலாளா் முருகேசன், கிராம சுகாதார செவிலியா் சங்க மாவட்டத் தலைவா் நந்தினி, பொது சுகாதாரத்துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலாளா் இளவேந்தன் உள்ளிட்டோா் வாழ்த்தி பேசினா். செவிலியா்கள் பலா் கலந்து கொண்டு சம ஊதியம் கோரி முழக்கங்கள் எழுப்பினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT