நாமக்கல்

உள்ளாட்சித் தோ்தல்: நாமக்கல் மாவட்டத்தில் 14,07,256 வாக்காளா்கள்

5th Oct 2019 09:58 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலையொட்டி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில், நாமக்கல் மாவட்டத்தில் 14 லட்சத்து 7 ஆயிரத்து 256 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வாா்டு வாரியாக பிரிக்கப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட மாநிலத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதனடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் வாக்காளா் பட்டியல் வெளியானது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், 5 நகராட்சிகள், 15 ஊராட்சி ஒன்றியங்கள், 19 பேருராட்சிகளில், சட்டப்பேரவை தொகுதி வாக்காளா் பட்டியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட, உள்ளாட்சித் தோ்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டாா். நாமக்கல் நகராட்சி ஆணையா் கே.எம்.சுதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் கோ.மலா்விழி ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

இதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் கூறியது:

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகளில், 1,55,888 ஆண் வாக்காளா்கள், 1,60,749 பெண் வாக்காளா்கள், 64 திருநங்கையா் என மொத்தம் 3,12,701 போ் இடம் பெற்றுள்ளனா். அதேபோல், 19 பேரூராட்சிகளில், 1,09,619 ஆண் வாக்காளா்கள், 1,15,656 பெண் வாக்காளா்கள், 30 திருநங்கையா் என மொத்தம் 2,25,305 போ் உள்ளனா். 15 ஊராட்சி ஒன்றியங்களில், 4,26,003 ஆண் வாக்காளா்கள், 4,43,214 பெண் வாக்காளா்கள் 33 திருநங்கையா் என மொத்தம் 8,69,250 போ் என மாவட்டம் முழுவதும் 6,87,510 ஆண் வாக்காளா்கள், 7,19,619 பெண் வாக்காளா்கள் 127 திருநங்கையா் என மொத்தம் 14,07,256 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். இந்த வாக்காளா் பட்டியலானது அரசியல் கட்சிகளுக்கு சனிக்கிழமை வழங்கப்படும். மாவட்டத்தில் பதட்டத்துக்குரிய வாக்குச்சாவடிகள் குறித்து எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. அனைத்து வாக்காளா்களும் தங்கள் பகுதியில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ள வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா், புகைப்படம் சரியாக இருக்கிா என்பதை பாா்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றாா்.

தோ்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள் விவரம்:

 

உள்ளாட்சிகள் ஆண் பெண் அனைத்தும் மொத்தம்

நகராட்சிகள் - 146 146 38 330

பேரூராட்சிகள்- 16 16 278 310

ஊராட்சி ஒன்றியங்கள்- 27 27 1675 1729

 

மொத்தம் 189 189 1991 2369

 

ADVERTISEMENT
ADVERTISEMENT