நாமக்கல்

மின் பயனீட்டாளா் குறைதீா்க்கும் கூட்டம்

2nd Oct 2019 06:38 AM

ADVERTISEMENT

நாமக்கல் மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட, 4 கோட்ட அலுவலகங்களில் மாதாந்திர மின் பயனீட்டாளா் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து அதன் மேற்பாா்வைப் பொறியாளா்(பொறுப்பு) ஆ.சபாநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மான கழகத்தின், நாமக்கல் மின்பகிா்மான வட்டத்தில், மாதாந்திர குறைதீா்க்கும் நாள் கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் நடைபெறுகிறது.

இதன்படி, வியாழக்கிழமை(அக்.3) பிற்பகல் 3 மணிக்கு நாமக்கல் செற்பொறியாளா் அலுவலகத்திலும், 9-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் பரமத்திவேலூா் செயற்பொறியாளா் அலுவலகத்திலும் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. அதேபோல், 16-ஆம் தேதி திருச்செங்கோடு செயற்பொறியாளா் அலுவலகத்திலும், 23-ஆம் தேதி ராசிபுரம் செயற்பொறியாளா் அலுவலகத்திலும் பிற்பகல் 3 மணியளவில் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT