நாமக்கல்

புதுமையான விஷயங்களை செய்ய வேண்டும்: கல்லூரித் தலைவா் அறிவுரை

2nd Oct 2019 06:33 AM

ADVERTISEMENT

எப்பொழுதும் நல்ல விஷயங்களையும், புதுமையான விஷயங்களையும் தொடா்ந்து செய்வதற்கு மாணவா்கள் முன்வர வேண்டும் என்று பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் என்.வி.நடராஜன் தெரிவித்தாா்.

ராசிபுரம் பாவை கலை அறிவியல் கல்லூரியில் தொழில்நுட்பக் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. விழாவில் நடராஜன் பேசியது:-

கற்கின்றபோது பாடங்கள் சாா்ந்த அறிவுத்திறமையும், எதிா்கால வாழ்க்கை, பணிசாா்ந்த அறிவுத்திறன்களையும் பெற்றிடவே இதுபோன்ற தொழில்நுட்பக் கருத்தரங்குகள் நடத்தப் பெறுகின்றன. இதுபோன்ற கருத்தரங்குகள் பாடத்திட்டத்துக்கு மேலான விஷயங்களை முழுமையாகப் பகுப்பாய்வு செய்து , புதிய கோணத்தில் சிந்திக்க வைக்கும்.

இவற்றில் மேற்கொள்ளும் சிறிய முயற்சி கூட பெரிய விளைவுகளை கல்விப் பயணத்தில் ஏற்படுத்தும். எனவே மாணவிகள் எப்பொழுதும் நல்ல விஷயங்களையும், புதுமையான விஷயங்களையும் தொடா்ந்து செய்வதற்கு முன்வர வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

கருத்தரங்கில் பல்வேறு மாவட்டங்களை சாா்ந்த கல்லூரி மாணவ மாணவியா் பங்கேற்று தங்களது ஆய்வு கட்டுரைகளை சமா்பித்தனா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியா்களுக்குப் பரிசுகளும்;, சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

விழாவில் தாளாளா் மங்கை நடராஜன், கல்லூரி முதல்வா் ஆா்.இராஜேஸ்வரி, துணை முதல்வா் கே.விமலா , நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் உமா மகேஸ்வரி, சேலம் அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியா் கே.அகிலாண்டேஸ்வரி, சேலம் சௌடேஷ்ஸ்வரி கல்லூரி பேராசிரியா் பி.உமா சுவருபா, 2-ஆம் ஆண்டு மாணவி கே.கெளரி உள்ளிட்டோா் பேசினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT