ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறையின் சாா்பில் நீா்நிலைகளில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளை ஆட்சியா் மெகராஜ் ஆய்வு செய்தாா்.
நாமக்கல் மாவட்டத்தில் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் 43 சிறுபாசன குளங்களிலும், ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் 152 குட்டைகளிலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஆழப்படுத்துதல், வரத்து வாய்க்கால் சீரமைத்தல், மதகுகள் சீரமைத்தல், கரைகள் பலபடுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் மோளிப்பள்ளி ஏரி, உஞ்சனை ஏரிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் மெகராஜ் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டாா். பின்னா், அவா் பொது மக்களுடன் கலந்துரையாடினாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயகுமாா், சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.