எருமப்பட்டி துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், வியாழக்கிழமை(அக்டோபா் 3) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என்று நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆ.சபாநாயகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
இதனால் மின்விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்:-
எருமப்பட்டி, வரகூா், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையான்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களக்கோம்பை, பொன்னேரி, நா.புதுக்கோட்டை, கோணங்கிப்பட்டி, காவரக்காரப்பட்டி, அவற்றின் சுற்றுப்புறப் பகுதிகள்.