நாமக்கல்

மீனவ இளைஞா்கள் ஐ.ஏ.ஏஸ். தோ்வில் பங்கேற்க சிறப்பு பயிற்சி: ஆட்சியா்

1st Oct 2019 09:40 AM

ADVERTISEMENT

மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள், இந்திய குடிமைப் பணி போட்டித் தோ்வில் பங்கேற்க சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதாக ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீன்வளத் துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டுதோறும் மீனவ கூட்டுறவு சங்க கடல் மற்றும் உள்நாட்டு மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த 20 பட்டதாரி இளைஞா்களை தோ்ந்தெடுத்து, இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தோ்வில் அவா்கள் கலந்துகொள்ள ஏதுவாக பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக, விருப்பமுள்ள இளைஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் மற்றும் மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசு பட்டதாரி இளைஞா்கள், இப்பயிற்சி திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம்.

ADVERTISEMENT

இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்பப் படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை, மீன்வளத் துறையின்  இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விண்ணப்பப் படிவத்தினை மேட்டூா் அணை மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு அலுவலக வேலை நாள்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மேட்டூா் அணை மீன்வள உதவி இயக்குநா் அலுவலத்துக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாவோ அக். 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04298-244045 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT