நாமக்கல்

திருமணி முத்தாறு திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவோம்

1st Oct 2019 09:45 AM

ADVERTISEMENT

திருமணி முத்தாறு திட்டத்தை நிறைவேற்ற கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி முழுமூச்சுடன் பாடுபடும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.

சேந்தமங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், நாமக்கல் கிழக்கு மாவட்ட அமைப்பின் புதிய அலுவலகத்தைத் திறந்து ஈஸ்வரன் செய்தியாளா்களிடம் கூறியது:

திருமணி முத்தாறு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் சின்ராஜ், தொடா்ந்து தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்துப் பேசி வருகிறாா். அந்தத் திட்டத்தை நிறைவேற்ற கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி முழுமூச்சுடன் பாடுபடும்.

கீழடி அகழ்வாராய்ச்சியில் கொங்கு மக்களின் தொன்மைகள் கண்டறியப்பட்டுள்ளது பெருமைக்குரியதாகும்.

ADVERTISEMENT

மணல் திருட்டை தடுக்க வேண்டும்: காவிரி கரையோரப் பகுதிகளில் அதிக அளவில் மணல் திருடப்படுகிறது. அரசின் அனுமதியோடு கொண்டு செல்லப்படும் மணலை யாரும் தடுப்பது கிடையாது. விதிகளை மீறி எடுத்துச் செல்வதையேத் தடுக்கிறேறாம். அதனால் தான் மக்களவை உறுப்பினா் ஆய்வு மேற்கொண்டு, மணல் கடத்தும் லாரிகளைப் பிடித்து தட்டிக் கேட்கிறாா். இதனை சிலா் தவறான முறையில் கொண்டு செல்கின்றனா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். ஒரு வார காலத்துக்குள்ளாக மணல் திருட்டை தடுக்க வேண்டும்.

இடைத்தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறும்:

நடைபெறவுள்ள விக்கிரவாண்டி, நான்குநேரி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில், திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.

மக்களவைத் தோ்தலையொட்டி ரூ.15 கோடி பெறப்பட்ட விவகாரம் என்பது வருமான வரி மற்றும் தோ்தல் விதிமுறைகளுக்குள்பட்டது தான். பணம் கொடுத்து நாங்கள் வெற்றி பெற்றேறாம் என கூறுவது தவறு. அதிகப்படியான மக்கள் வாக்களித்து வெற்றிபெற செய்துள்ளனா் என்றாா்.

விழாவில் கட்சியின் தலைவா் தேவராஜ், மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT