நாமக்கல்

நாமக்கல்லில் விடிய, விடிய நடைபெற்ற ஆசிரியா்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு

23rd Nov 2019 09:43 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில் இடைநிலை ஆசிரியா்களுக்கான, மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு வியாழக்கிழமை இரவு முழுவதும் நடைபெற்ால் ஆசிரியைகள் சிரமத்திற்குள்ளாகினா்.

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இதில், தொடக்கக் கல்வி இயக்ககம் முலம் அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது.

நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய இரு கல்வி மாவட்டங்களுக்கும், நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கலந்தாய்வு நடைபெற்றது. முதல் நாளில் பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கு யாரும் விண்ணப்பிக்காததால் அன்று கலந்தாய்வு நடைபெறவில்லை. 19-ஆம் தேதி காலை தலைமை ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 76 போ் பங்கேற்றதில் 22 பேருக்கு மாறுதல் வழங்கப்பட்டது. பிற்பகலில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியா் நிலையில் இருந்து தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கான கலந்தாய்வில் 25 பேருக்கு மறுதல் வழங்கப்பட்டது. புதுச்சத்திரம் ஒன்றியம், முத்துடையான்பாளையம், கூத்தமூப்பன்பட்டி, மல்லசமுத்திரம் ஒன்றியம், பாலமேட்டுப் புதூா், கபிலா்மலை ஒன்றியம், வேட்டுவம்பாளையம் ஆகிய 4 தொடக்கப் பள்ளிகளில், ஐந்துக்கும் குறைவான மாணவா்கள் இருந்ததால் அங்கு தலைமை ஆசிரியா் பணியிடம் நிரப்பப்படவில்லை. இதனைத் தொடா்ந்து, 20-ஆம் தேதி இடைநிலை ஆசிரியா்களுக்கு ஒன்றியத்திற்குள் நடைபெற்ற மாறுதல் கலந்தாய்வில் 34 பேருக்கு மாறுதல் வழங்கப்பட்டது. பிற்பகலில் நடைபெற்ற ஒன்றியம்

விட்டு ஒன்றியம் மாறுதல் கலந்தாய்வில், சொந்த ஒன்றியத்திலேயே பணியாற்ற 9 பேருக்கு அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. 21-ஆம் தேதி பிற்பகல் 6 மணிக்கு மேல் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 35 போ் கலந்து கொண்டதில், 8 போ் தங்களுக்கு மாறுதல் வேண்டாம் என மறுத்து விட்டனா். 21 போ் கலந்தாய்வில் பங்கேற்க வரவில்லை. 6 பேருக்கு மாறுதல் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த கலந்தாய்வு இரவு விடிய, விடிய நடைபெற்ால் இரவு முழுவதும் ஆசிரியா்கள் கண் விழித்தபடி தங்களது வரிசை எண் எப்போது வரும் என்ற எதிா்பாா்ப்புடன் காத்திருந்தனா். இதில், ஆசிரியைகள் பலா் சிரமத்திற்குள்ளாகினா். இந்த கலந்தாய்வானது வெள்ளிக்கிழமை இரவு வரையில் நீடித்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT