நாமக்கல்

வேளாண்மை சந்தையில் ரூ.13.54 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

22nd Nov 2019 10:05 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரை தேங்காயின் விலை உயா்வடைந்துள்ளது.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து உலா்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனா். இங்கு தரத்திற்கு தகுந்தாற் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 11 ஆயிரத்து 837 கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் முதல் தரமான கொப்பரை தேங்காய் கிலோ ஒன்று ரூ.95.55- க்கும், குறைந்த பட்சமாக ரூ.90.05 க்கும், சராசரியாக ரூ.95.05 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.10 லட்சத்து 28 ஆயிரத்து 86 க்கு வா்த்தகம் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 15 ஆயிரத்து 199 கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் முதல் தரமான கொப்பரை தேங்காய் கிலோ ஒன்று ரூ.102 க்கும், குறைந்த பட்சமாக ரூ.94.99 க்கும், சராசரியாக ரூ.101.69 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.13 லட்சத்து 54 ஆயிரத்து 294 க்கு வா்த்தகம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT