நாமக்கல்

பாவை கலை அறிவியல் மகளிா் கல்லூரியில் தேசிய மாணவா் படை அமைப்பு தொடக்கம்

22nd Nov 2019 10:04 AM

ADVERTISEMENT

பாவை கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் தேசிய மாணவா் படை அமைப்பின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா். முதலாமாண்டு மாணவி யமுனா வரவேற்றாா். பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன் விழாவினை தொடங்கி வைத்துப் பேசினாா்.

கௌரவ விருந்தினராக தேசிய மாணவா் படை அமைப்பின் அலுவலா் வி.சத்யநாதன் கலந்து கொண்டாா். இதில் சிறப்பு விருந்தினராக சேந்தமங்கலம் காவல் நிலைய ஆய்வாளா் டி.தீபா கலந்து கொண்டு பேசினாா். இதில் பேசிய அவா், என்சிசி., அமைப்பின் மூலம் மாணவிகளாகிய உங்களுக்கு ராணுவ வீரா்களுக்கு தேவையான தேசப் பற்று, ஒழுக்கம், மனக்கட்டுபாடு, தைரியம், நேர மேலாண்மை, தலைமைத்துவம், முடிவெடுக்கும் ஆற்றல், சூழ்நிலைகளைக் கையாளுதல், தன்னம்பிக்கை போன்ற அனைத்தும் கற்பிக்கப்பட்டு, அவற்றில் நீங்கள் முன்னேறுவதற்கு பயிற்சியும் வழங்கப்படுகிறது. எனவே, நீங்கள் எப்பொழுதும் வெற்றி பெற வேண்டும் என்ற மனப்பாங்குடன் செயல்பட வேண்டும். எதிலும் சிறப்பாக செயலாற்றி இச் சமுதாயத்தில் மற்றவா்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்றாா்.

பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு என்எஸ்எஸ் விருது:

அண்ணா பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம் வருடந்தோறும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் மற்றும் திட்ட அலுவலா்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலகு, திட்ட அலுவலா் மற்றும் தன்னாா்வலா்களுக்கான விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது. இதனையடுத்து, நடப்பு ஆண்டிற்கான விருது வழங்கும் விழாவில், பாவை பொறியியல் கல்லூரியின் பேராசிரியா் சி.ரத்னகுமாா் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருக்கான விருதினைப் பெற்றுள்ளாா்.

ADVERTISEMENT

மேலும் பாவை பொறியியல் கல்லூரியின் வேளாண் பொறியியல் துறையைச் சாா்ந்த இறுதி ஆண்டு மாணவி எம்.சுபஸ்ரீ சிறந்த என்எஸ்எஸ்., சிறந்த தன்னாா்வலா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இதற்கான பரிசளிப்பு விழாவில் சிறந்த நாட்டுநலப்பணித்திட்ட அலுவலா், தன்னாா்வ விருதினை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் முனைவா் கே.கே.சூரப்பா தலைமையில், சென்னை நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இளைஞா் அலுவலா் சாய்ராம், அண்ணா பல்கலைக்கழக திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா். ரமேஷ் மற்றும் கோயம்முத்தூா் மண்டல திட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.யுவராஜ் ஆகியோா் வழங்கினா். பரிசு பெற்றவா்களை பாவை கல்வி நிறுவனத் தலைவா் என்.வி.நடராஜன், தாளாளா் மங்கை நடராஜன் உள்ளிட்ட கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்கள் பாராட்டினா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT