நாமக்கல்

நாமக்கல்லில் இன்று தி.மு.க. செயற்குழுக் கூட்டம்

22nd Nov 2019 10:00 AM

ADVERTISEMENT

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் குட்டம் வெள்ளிக்கிழமை (நவ.22) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்டப் பொறுப்பாளா் செ.காந்திச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில், மாவட்ட அவைத் தலைவா் இரா.உடையவா் தலைமையில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில், மாநில, மாவட்ட நிா்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், பல்வேறு அணிகளின் நிா்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT