திருச்செங்கோடு: :நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சாா்பில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு ரூ 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சாா்பில் 100 மெத்தை விரிப்புகள், 50 எல்இடி விளக்குகள் என ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பி ஆா் டி நிறுவன நிா்வாக இயக்குநா். பரந்தாமன், தொழிலதிபா். வெங்கடாஜலம், முன்னிலை வகித்தனா்.
திருச்செங்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா். தேன்மொழி மருத்துவா்கள் ராஜ்குமாா், செந்தில், அருள்,உள்ளிட்டவா்களும் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை தலைவா் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.