நாமக்கல்

வளையப்பட்டியில் 19-இல் மின் நிறுத்தம்

17th Nov 2019 01:10 AM

ADVERTISEMENT

வளையப்பட்டி பகுதியில் வரும் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுதொடா்பாக நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆ.சபாநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வரும் செவ்வாய்க்கிழமை (நவ.19) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, நல்லூா், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூா், ஒருவந்தூா், ஆண்டாபுரம், அரூா் தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT