நாமக்கல்

முட்டை விலை ரூ.4.15-ஆக நிா்ணயம்

17th Nov 2019 01:11 AM

ADVERTISEMENT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 2 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ.4.15-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தினசரி முட்டைக்கான பண்ணைக் கொள்முதல் விலை அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல்லில் சனிக்கிழமை அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமைக்கான விலை நிா்ணய கூட்டத்தில் முட்டை விலையை சற்று உயா்த்தலாம் என பண்ணையாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 2 காசுகள் உயா்ந்து ரூ.4.15-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்கோழி கிலோ ரூ.94-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT