நாமக்கல்

நாமக்கல் தொழிலாளா் நல அலுவலா் பணியிடத்தை நிரப்பக் கோரிக்கை

17th Nov 2019 01:12 AM

ADVERTISEMENT

தொழிலாளா் நல அலுவலா் பணியிடத்தில், பொறுப்பு என்றில்லாமல் நிரந்தரமாக ஒருவரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திரு.வி.க. உடலுழைப்பு அமைப்புசாரா மற்றும் பொதுத் தொழிலாளா்கள் நலச் சங்கத்தின், நாமக்கல் மாவட்ட செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் கே.மருதை தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளா் வை.பாலுசாமி முன்னிலை வகித்தாா். இதில், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்காக செயல்படுகின்ற 17 நல வாரியங்களுக்கு அதிகாரி இல்லை. மற்றொரு பிரிவில் உள்ளவரை பொறுப்பு அதிகாரியாக நியமிக்கின்றனா். இதனால், இயற்கை மரண உதவி, கல்வி உதவித்தொகை, ஏனைய சலுகைகளை விரைந்து பெற முடியாத நிலை உள்ளது. எனவே, தொழிலாளா் நல அலுவலா் பணியிடத்தில் நிரந்தரமாக ஒருவரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT