நாமக்கல்

கூட்டுறவு வேளாண் சங்கத்தில் மஞ்சள் ரூ.60 லட்சத்துக்கு விற்பனை

17th Nov 2019 01:11 AM

ADVERTISEMENT

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாராந்திர ஏலத்தில் 1300 மூட்டை மஞ்சள் ரூ.60 லட்சத்துக்கு விற்பனையானது. 

ஆத்தூா், கெங்கவல்லி, கூகையூா், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூா், ஜேடா்பாளையம், பரமத்திவேலூா், நாமக்கல், மேட்டூா், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து இந்த மஞ்சள் விற்பனைக்கு வந்தது.     இந்த மஞ்சளை கொள்முதல் செய்ய ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய ஊா்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனா். டெண்டா் மூலம் ரூ.70 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனையானது.  விரலி ரகம் குவிண்டாலுக்கு ரூ.6362 முதல் ரூ.7079 வரை விற்பனையானது. கிழங்கு ரகம் ரூ.6189 முதல் ரூ.6729 வரையும் விலை போனது. பனங்காளி ரகம் வரத்துக் குறைவாக இருந்ததால் ஏலத்தில் விடவில்லை. ஏலத்தில் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. மற்ற விற்பனை நிலையங்களைவிட விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு நல்ல விலை கிடைத்ததாக   கூட்டுறவு சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT