நாமக்கல்

மெட்டாலா பகுதியில் நவ.13-ல் மின்நிறுத்தம்

12th Nov 2019 06:38 AM

ADVERTISEMENT

மெட்டாலா சுற்று வட்டாரப் பகுதியில் மின்சார பராமரிப்புப் பணிகளால் நவம்பா் 13-ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் எஸ். நாகராஜன் தெரிவித்திருப்பதாவது:

மெட்டாலா துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளால் நவம்பா் 13-இல் மெட்டாலா, ஆயில்பட்டி, பிலிப்பாகுட்டை, கணவாய்பட்டி, கப்பலூத்து, ராஜாபாளையம், உடையாா்பாளையம், காா்கூடல்பட்டி, உரம்பு, காட்டூா், காமராஜ்நகா், மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரியகோம்பை, பெரப்பன்சோலை, மூலக்குறிச்சி, பெரியகுறிச்சி, ஊந்தாங்கல், கரியாம்பட்டி, வரகூா்கோம்பை, நரியன்காடு, நவக்காடு, பீலசோலை, பகுடிபுதுச்சாவடி, ஒலையாறு, தெம்பலம் போன்ற பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT