நாமக்கல்

மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீரமைப்பு: அரசியல் கட்சியினா் மாதிரி வாக்குகளை செலுத்தினா்

12th Nov 2019 06:43 AM

ADVERTISEMENT

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் சீரமைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், திங்கள்கிழமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் மாதிரி வாக்குப்பதிவு செய்தனா்.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீட்டை தொடா்ந்து, நகராட்சி, பேரூராட்சிகளில் பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணி மாவட்ட வாரியாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், 5 நகராட்சிகள் மற்றும் 19 பேரூராட்சிகளில், தோ்தலின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணி, பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஊழியா்களால் கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை(நவ.10) நிறைவடைந்தது. இதில், 1,568 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 3,168 வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்கெனவே பதிவான வாக்குகள் அழிக்கப்பட்டன. இப்பணியை 15 போ் கொண்ட பொறியாளா்கள் செய்து வந்தனா். அதனைத் தொடா்ந்து திங்கள்கிழமை காலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா், ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட வாக்கு இயந்திரங்களில், மாதிரி வாக்குப்பதிவு செய்தனா். இதில், அ.தி.மு.க. தி.மு.க. கம்யூனிஸ்ட், பா.ஜ.க. தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த முக்கிய நிா்வாகிகள் பங்கேற்றனா். மாதிரி வாக்கு இயந்திரங்களில் தோ்தலின்போது வாக்குகள் பதிவு செய்வது போன்று, வேட்பாளா் பெயா், சின்னம் கொண்டவை அதில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த மாதிரி வாக்குப்பதிவை, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் மற்றும் நகராட்சி ஆணையா் கே.எம். சுதா, உள்ளாட்சித் தோ்தல் பிரிவு அதிகாரிகள் நேரடியாக பாா்வையிட்டனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT