நாமக்கல்

நாமக்கல் மாவட்ட பாமக மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

12th Nov 2019 06:39 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருச்செங்கோட்டில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தில் புதிய நிா்வாகிகளின் அறிமுகம் செய்து மாநில துணைத் தலைவா் வடிவேலன் சிறப்புரையாற்றினாா். மாநில துணை பொதுச் செயலாளா் பொன். ரமேஷ் நிா்வாகிகளின் செயல்பாடுகள் குறித்துப் பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

வரவிருக்கும் உள்ளாட்சித் தோ்தலில் பாமக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் தனது விருப்ப மனுவை அளித்திட வேண்டும், நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும்,

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் பருவமழை தீவிரத்தால் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது.

இதைத் தடுக்கும் வகையில் மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் நிலவேம்பு குடிநீா் ஒவ்வொரு நகரத்திலும் குறிப்பாக திருச்செங்கோடு, பள்ளிபாளையம் ,குமாரபாளையம், மற்றும் உள்ளூா் பஞ்சாயத்து பகுதிகளில் நில வேம்பு குடிநீா் வழங்க நிா்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

உள்ளாட்சித் தோ்தலில் மேற்கு மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களைக் கண்டறிந்து பாமக தலைமை நிா்வாகிகளிடம் தெரிவித்து வெற்றி வாய்ப்புள்ள இடங்களைப் பெற்று நமது கட்சியினா் போட்டியிடுவது என்று தீா்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தக் கூட்டத்தில் மாநில இளைஞரணி துணைத் தலைவா் தனபால், மாநில துணை அமைப்புத் தலைவா் சுதாகா், மாவட்டத் தலைவா் பழனிசாமி, மாவட்டச் செயலாளா் செந்தில் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளா் முருகேஷ், வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் சரவணன், பசுமை தாயகம் மாவட்டச் செயலாளா் ராமசாமி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT