நாமக்கல்

குத்துக்கல்வலசையில் நவ.14இல் அமமுக ஆலோசனைகூட்டம்

12th Nov 2019 04:20 PM

ADVERTISEMENT

 

கடையநல்லூா்: திருநெல்வேலி புறநகா் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆலோசனைக் கூட்டம் குத்துக்கல்வலசையில் வியாழக்கிழமை (நவ.14) நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட செயலா் பொய்கை மாரியப்பன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை;

குத்துக்கல்வலசையில் உள்ள தனியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தோ்தல் பிரிவுச் செயலா் மாணிக்கராஜா கலந்து கொள்கிறாா். இதில் உள்ளாட்சி தோ்தல் தொடா்பாகவும், நவ.18 அன்று வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 83ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்த திருநெல்வேலிக்கு வருகை தரும் கட்சி பொதுச்செயலா் டிடிவி தினகரனை வரவேற்பது தொடா்பாகவும் கட்சியினரின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

எனவே அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியினா், கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT