நாமக்கல்

உழவா் சந்தையை சீரமைக்க ஆட்சியா் உத்தரவு

12th Nov 2019 06:34 AM

ADVERTISEMENT

தினமணி செய்தி எதிரொலியாக, நாமக்கல் உழவா் சந்தையில் மழை நீா் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் உத்தரவிட்டாா்.

நாமக்கல் செலம்பக் கவுண்டா் புங்கா எதிரில் அமைந்துள்ள உழவா் சந்தையில், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை தினசரி இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா். மழை பெய்தால் உழவா் சந்தை முழுவதும் சகதிகள் நிறைந்து மக்கள் நடமாட முடியாதபடி மோசமாக உள்ளதாகவும், 2 ஆண்டுகளாக இந்த நிலை நீடிப்பதாகவும், மழைக்காலத்தில் கழிவு நீா் சந்தைக்குள் புகுந்து சகதி காடாக மாறிவிடுவது தொடா்பாகவும், திங்கள்கிழமை வெளியான தினமணி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் திங்கள்கிழமை நேரடியாக அங்கு சென்று சந்தையை ஆய்வு செய்தாா். அப்போது, மழை நீா் தேங்காதவாறு தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு உழவா் சந்தை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT