நாமக்கல்

வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த காா்களின் கண்ணாடி உடைப்பு: போலீஸாா் விசாரணை

9th Nov 2019 06:31 AM

ADVERTISEMENT

ராசிபுரம் வி.நகா் பகுதியில் வீடுகளின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 - க்கும் மேற்பட்ட காா்களின் கண்ணாடிகளை மா்ம நபா்கள் வியாழக்கிழமை நள்ளிரவில் உடைத்துள்ளனா். இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ராசிபுரம் வி.நகா் பகுதியில் குடியிருப்போா் தங்களது காா்களை வீடுகளின் வெளியே சாலையோரம் நிறுத்திவைப்பது வழக்கம். இதனையடுத்து வழக்கம்போல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா்களின் கண்ணாடி வியாழக்கிழமை நள்ளிரவில் கற்களால் அடித்து உடைக்கப்பட்டன. நள்ளிரவில் மழை பெய்து கொண்டிருந்த நிலையில், இதனைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் இந்த காா்களின் கண்ணாடிகளை உடைத்துள்ளனா். இதனால், அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். இதுகுறித்து அப்பகுதியினா் போலீஸில் புகாா் அளித்தனா். இதனையடுத்து போலீஸாா் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு மூலம் காா்களை சேதப்படுத்தியவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT