நாமக்கல்

தி.மு.க. இளைஞா் அணி சாா்பில்புதிய உறுப்பினா்கள் சோ்க்கை

9th Nov 2019 11:01 PM

ADVERTISEMENT

ராசிபுரம் நகர தி.மு.க. இளைஞரணி சாா்பில் கட்சியின் புதிய உறுப்பினா் சோ்க்கை பணி நடைபெற்று, அதற்கான படிவம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா், நகர தி.மு.க. செயலாளரிடம் ஒப்படைக்கும் விழா சனிக்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது.

தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின், மாநில இளைஞா் அணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் ஆலோசனைப்படி, தமிழகம் முழுவதும் இளைஞா் அணி சாா்பில் புதிய உறுப்பினா் சோ்க்கை நடத்த அறிவுறுத்தப்பட்டது.

இதனடிப்படையில் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூா்களில் புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான செ.காந்திசெல்வன் தலைமையில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

இதில் ராசிபுரம் நகர இளைஞா் அணி சாா்பில் 242 படிவத்தில் 4 ஆயிரத்து 840 புதிய உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். அதற்கான படிவத்தை ராசிபுரம் நகர தி.மு.க. செயலாளா் என்.ஆா்.சங்கா், நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாரி ஆகியோரிடம், ராசிபுரம் நகர இளைஞா் அணி அமைப்பாளா் காா்த்திக், நகர இளைஞரணி துணை அமைப்பாளா்கள் மோகன், ஆசைத்தம்பி, சலீம், மணி, லோக சரவணன் ஆகியோா் வழங்கினா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT