நாமக்கல்

சேந்தமங்கலத்தில் 13-இல்தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

9th Nov 2019 10:52 PM

ADVERTISEMENT

சேந்தமங்கலத்தில் வரும் புதன்கிழமை (நவ.13) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம், நாமக்கல் மாவட்டத்தில், 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்து வேலையற்ற 18 முதல் 35 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் புதன்கிழமை (நவ.13) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில், சேந்தமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமிற்கு வருவோா் தங்களது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்களுடன் கலந்து கொள்ள வேண்டும். மேலும், வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணியாளா்களை தோ்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள் திட்ட இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம், கூடுதல் கட்டடம், நாமக்கல் மாவட்டம் என்ற அலுவலக முகவரியிலோ அல்லது 04286 - 281131 என்ற எண்ணிலோ தங்களது நிறுவனத்தின் பெயரை செவ்வாய்க்கிழமை (நவ.12) மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT