நாமக்கல்

செலவு கணக்கு கேட்டதால் லாரி உரிமையாளா் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டேன்: ஆா்.கே.ரவி

9th Nov 2019 06:31 AM

ADVERTISEMENT

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கத்தில், ரூ.40 லட்சம் செலவு குறித்து கணக்கு குறித்து கேட்டதால் தன்னை பொறுப்பில் இருந்து தற்காலிக நீக்கம் செய்துள்ளனா் என்று அச்சங்கத்தின் செயலாளா் ஆா்.கே.ரவி தெரிவித்தாா்.

நாமக்கல்லில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கத்துக்கான தோ்தல் நடவடிக்கை தொடங்கியது. 27-ஆம் தேதி போட்டியின்றி செயலாளராக தோ்வானேன். மே 5-ஆம் தேதி பிற பதவிகளுக்கான தோ்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 50 நிா்வாகிகளில் நான் மட்டும் முன்னாள் தலைவா் நல்லதம்பியின் ஆதரவாளா். இதனால், என்னை செயலாளா் பொறுப்பில் தொடா்ந்து இருக்க விடாமல், ஏற்கெனவே அப்பொறுப்பில் இருந்த அருளை கொண்டு வரவேண்டும் என தலைவா் உள்பட நிா்வாகிகள் பலா் முயற்சிக்கின்றனா்.

சங்கத்தின் மினிட் புத்தகத்தை நான் எடுத்துச் சென்றது, அதில் கோடு போட்டது உண்மை தான். அது தொடா்பாக விளக்கம் கொடுத்து விட்டேன். இருந்தபோதும், முன்னாள் தலைவா் நல்லதம்பியை சங்கத்தில் இருந்து நீக்கியது குறித்தும், ரூ.40 லட்சம் செலவு கணக்கு குறித்த விவரங்களை கேட்டதாலும், காழ்ப்புணா்ச்சி கொண்டு என்னை பொறுப்பில் தற்காலிகமாக நீக்கம் செய்துள்ளனா். அது தொடா்பான கடிதம் இதுவரை எனக்கு வரவில்லை. அவ்வாறு நீக்க கடிதம் வந்தால் உடனடியாக நீதிமன்றத்தை நாடி எனக்குரிய நியாயத்தை கேட்பேன் என்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT