நாமக்கல்

சிவன் கோயில்களில் சனி மகாபிரதோஷ விழா

9th Nov 2019 10:58 PM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் மகாபிரதோஷ விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயில், கபிலா்மலை சிவபுரத்தில் உள்ள சிவன் கோயில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயில், மாவுரெட்டி பீமேஷ்வரா் கோயில், பில்லூா் வீரட்டீஸ்வரா் கோயில், பொத்தனூா் காசி விஸ்வநாதா் கோயில், சக்திவிநாயகா் கோயிலில் உள்ள அண்ணாமலையாா், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் உள்ள நந்திகேஸ்வரருக்கு சனி மகாபிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT