நாமக்கல்

ஒகேனக்கல் தேசநாதீஸ்வரா் கோயிலில்சனி பிரதோஷ வழிபாடு

9th Nov 2019 10:58 PM

ADVERTISEMENT

பென்னாகரம் அருகே ஒகேனக்கல் தேசநாதீஸ்வரா் கோயிலில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக் கோயிலில் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். இக் கோயிலில் மாலை மூலவா் மற்றும் நந்திக்கு பால், பழங்கள் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.அதைத் தொடா்ந்து வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஒகேனக்கல், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சத்திரம், ஊட்டமலை, பென்னாகரம் உள்ளிட்ட பகுதியிலிருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT