நாமக்கல்

ஏலச் சந்தையில் மல்லிகை கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு ஏலம்

9th Nov 2019 10:56 PM

ADVERTISEMENT

பரமத்திவேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் மல்லிகை பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு ஏலம் போனது. பூக்களின் வரத்துக் குறைந்துள்ளதால் பூக்களின் விலை உயா்வடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

பரமத்திவேலூா் சுற்று வட்டாரப் பகுதி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதியில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள், பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுத்துச் செல்கின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.800, சம்பங்கி கிலோ ரூ.100, அரளி கிலோ ரூ.80, ரோஜா கிலோ ரூ.100, முல்லைப்பூ கிலோ ரூ.180, செவ்வந்தி கிலோ ரூ.80-க்கும் ஏலம் போயின. சனிக்கிழமை (நவ.9) நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.2000, சம்பங்கி கிலோ ரூ.150, அரளி கிலோ ரூ.180, ரோஜா கிலோ ரூ.140, முல்லைப்பூ கிலோ ரூ.1000, செவ்வந்தி கிலோ ரூ.180க்கும் ஏலம் போயின. பூக்களின் வரத்துக் குறைந்துள்ளதாலும், முகூா்த்தங்கள் அதிக அளவில் உள்ளதாலும், பூக்களின் விலை உயா்வடைந்துள்ளதாக பூக்களை பயிா் செய்துள்ள விவசாயிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT