நாமக்கல்

ஊராட்சி செயலா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

9th Nov 2019 03:55 PM

ADVERTISEMENT

நாமக்கல்: நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட, 25 ஊராட்சி செயலா்கள் மற்றும் துப்புரவு பணியாளா்கள், தூய்மை காவலா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில், வட்டார வளா்ச்சி அலுவலா்(கிராம ஊராட்சி) ஆா்.தேன்மொழி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் பி.அருணன் முகாமினை தொடக்கி வைத்தாா். இதில், எா்ணாபுரம் மருத்துவ அலுவலா் டி.ராஜேந்திரன் மற்றும் மருத்துவா்கள் சா்மிளா, சிவச்சந்திரன் உள்ளிட்டோா், 200க்கும் மேற்பட்டோருக்கு ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த மாதிரிகள் எடுப்பு, காய்ச்சல், உடல் ரீதியான தொந்தரவுகளுக்கு சிகிச்சை அளித்ததுடன், அதற்குரிய மருந்து, மாத்திரைகளையும் வழங்கினா்.

இந்த முகாமில், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுமதி, திருஞானம், செல்வராஜ், கவிதா மற்றும் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா்கள், ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT