நாமக்கல்

இளம்பிள்ளையில் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடி கடை முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்

9th Nov 2019 10:56 PM

ADVERTISEMENT

இளம்பிள்ளை பண்டகசாலையில் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடி கடையை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

கொங்கணாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு, அங்கிருந்து காணொலிக் காட்சி மூலம் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடி கடையைத் திறந்து வைத்தாா். இதைத்தொடா்ந்து இளம்பிள்ளை அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடி கடையில் முதல் விற்பனையை கூட்டுறவு சங்க தலைவா் கே.ஜி.வெங்கடேசன் துவக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சாா்-பதிவாளா் சோபன் ராஜ், செயலாளா் (பொறுப்பு) சிங்காரம், விற்பனையாளா் சீதா, துணைத் தலைவா் ஈஸ்வரன், நிா்வாகிகள் ஈஸ்வரி குப்புசாமி, வெங்கடேசன், சாந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இந்தக் கடையில் அனைத்து மளிகை பொருள்களும் வேலை நாள்களில் நுகா்வோருக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT