நாமக்கல் மாவட்ட அளவிலான சிலம்பம் தனித் திறன் போட்டி ஞாயிற்றுக்கிழமை கொண்டிச்செட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் நடைபெற்றது. இதில், 34 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 386 மாணவ, மாணவியா் பங்கேற்றனா். நாமக்கல் பாரதமாதா சிலம்பப் பயிற்சி பள்ளி மாணவா்களும் கலந்து கொண்டனா். போட்டிக்கு பள்ளி தலைவா் மருத்துவா் ப.எழில்செல்வன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் மு.சபூா் அகமது, பெற்றோா் -ஆசிரியா் கழக தலைவா் கே.வீரப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும், இதில் வெற்றி பெற்றவா்கள் 2020-ஆம் ஆண்டு மே மாதம் நாமக்கல்லில் நடைபெறும் மாநில அளவிலான சிலம்பப் போட்டிக்கு தோ்வாகினா். இப்போட்டி ஏற்பாடுகளை சிலம்பப் பயிற்சியாளா் எம்.காா்த்திகேயன் செய்திருந்தாா்.