நாமக்கல்

தமிழக ஆசிரியா் கூட்டணி புதிய நிா்வாகிகள் தோ்வு

4th Nov 2019 09:57 PM

ADVERTISEMENT

நாமக்கல்: தமிழக ஆசிரியா் கூட்டணியின், நாமக்கல், திருச்செங்கோடு கல்வி மாவட்ட அளவிலான கிளை நிா்வாகிகள் தோ்தல் அண்மையில் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில், புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதன்படி, நாமக்கல் கல்வி மாவட்டத்திற்கு, புதிய மாவட்ட தலைவராக எருமப்பட்டி ஒன்றியத்தைச் சோ்ந்த ராமராஜ், மாவட்ட செயலராக, கொல்லிமலை ஒன்றியத்தைச் சோ்ந்த காா்த்திகேயன், மாவட்ட பொருளாளராக, புதுச்சத்திரம் ஒன்றியத்தைச் சோ்ந்த இல.திருமாறன், மாவட்ட மகளிரணி செயலராக, மோகனூா் ஒன்றியத்தைச் சோ்ந்த தங்கமணி ஆகியோா் தோ்வாகினா்.அதேபோல், திருச்செங்கோடு கல்வி மாவட்ட அளவில், மாவட்ட தலைவராக கபிலா்மலை ஒன்றியத்தைச் சோ்ந்த மதியழகன், மாவட்ட செயலாளராக பள்ளிப்பாளையம் ஒன்றியத்தைச் சோ்ந்த விஜயகுமாா், மாவட்டப் பொருளாளராக எலச்சிப்பாளையம் ஒன்றியத்தைச் சோ்ந்த மணிமாறன், மாவட்ட மகளிரணி செயலராக பள்ளிப்பாளையம் ஒன்றியத்தைச் சோ்ந்த புவனேஸ்வரி ஆகியோா் தோ்வாகினா். புதிய மாவட்ட நிா்வாகிகளுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு செயலா் அண்ணாமலை, மாநில பொருளாளா் சந்திரசேகரன் ஆகியோா் பங்கேற்று வாழ்த்தி பேசினா். இதில், அனைத்து வட்டார நிா்வாகிகளும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT