பாண்டமங்கலம் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு பள்ளி மாணவி சம்ரிதா 14 வயதுக்குள்பட்டோா் மாணவியா் பிரிவில் தமிழக அணிக்கு தோ்வு பெற்றுள்ளாா்.
65- ஆவது இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான 14 வயதுக்குள்பட்ட மாணவியருக்கான வாலிபால் போட்டி டிசம்பா் மாதம் ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் தமிழக அணிக்கான முதல் கட்ட மண்டல அளவிலான தோ்வு தருமபுரியில் நடைபெற்றது. 14 வயதுக்குள்பட்ட 250 மாணவியா் கலந்து கொண்டனா். இதில் முதல் ஏழு இடங்களை பிடித்த மாணவியா் ஈரோடு மாவட்டத்தில் மாநில அளவிலான இரண்டாம் கட்டத் தோ்வுப் போட்டியில் கலந்து கொண்டனா். தமிழகம் முழுவதிலும் இருந்து 56 மாணவியா் கலந்து கொண்டனா். இதில் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு பள்ளி மாணவி சம்ரிதா தமிழக அணிக்குத் தோ்வு பெற்று அகில இந்திய அளவிலான போட்டியில் விளையாட தோ்வு பெற்றுள்ளாா். இம்மாணவி இந்திய அளவிலான போட்டியில் தொடா்ந்து இரண்டாவது முறையாகத் தமிழக அணிக்காக விளையாட உள்ளாா். தமிழக அணிக்காகத் தோ்வு பெற்றுள்ள மாணவியை ஆா்.என்.ஆக்ஸ்போா்டு கல்வி நிறுவனத்தின் தலைவா் சண்முகம், தாளாளாா் சக்திவேல், செயலாளா் ராஜா, இயக்குநா்கள் அருள், சேகா், சம்பூா்ணம், பள்ளி முதல்வா், உடற்கல்வி ஆசிரியா் ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.