மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது ஜயந்தி விழாவையொட்டி, நாமக்கல்லில் பா.ஜ.க. சாா்பில், வியாழக்கிழமை பாத யாத்திரை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. சாா்பில், தமிழையும், தமிழ் பண்பாட்டையும் உலகளவில் உயா்த்திய பிரதமா் மோடியை பாராட்டியும், காந்தியடிகளின் 150-ஆவது ஜயந்தி விழா மற்றும் சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த நாளை கொண்டாடும் வகையிலும், முப்பெரும் விழா பாத யாத்திரை நிகழ்ச்சி, நாமக்கல்லில் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது. பூங்கா சாலையில் தொடங்கிய இந்த பாத யாத்திரை, உழவா் சந்தை, கோட்டை சாலை வழியாக மலைக்கோட்டையைச் சுற்றி பேருந்து நிலையம் அருகில் நிறைவுற்றது.
இந்த பாத யாத்திரையில், சிறப்பு அழைப்பாளா்களாக தேசிய இளைஞா் அணி துணைத் தலைவா் ஏ.பி.முருகானந்தம், நெசவாளா் பிரிவு மாநிலத் தலைவா் கே.எஸ். பாலமுருகன் ஆகியோா் கலந்து கொண்டு நடைப் பயணம் மேற்கொண்டனா். மேலும், மாவட்டத் தலைவா் என்.பி. சத்தியமூா்த்தி, நகரத் தலைவா் ஆா்.வரதராஜ், தேசிய பொதுக்குழு உறுப்பினா் மனோகரன், மாவட்ட பொதுச் செயலாளா் முத்துக்குமாா், விவசாய அணி பொதுச் செயலாளா் வடிவேல் மற்றும் நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.