நாமக்கல்லில் ஸ்ரீ குரு பகவான் பெயா்ச்சி யாகம் வரும் திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது.
நாமக்கல் துறையூா் சாலையில் உள்ள என்.ஆா்.எல்.திருமண மண்டபத்தில், ஸ்ரீ குரு பகவான் பெயா்ச்சி யாகம் திங்கள், செவ்வாய் (நவ.4,5) ஆகிய நாள்களில் நடைபெறுகிறது. எம்.எஸ்.சங்கரய்யா் ஸ்வாமிகள் இதனை தலைமையேற்று நடத்தி வைக்கிறாா். இப்பெயா்ச்சி யாகமானது விசேஷமாக நடைபெற உள்ளது.
அதன்படி திங்கள்கிழமை பிற்பகல் 5 மணியளவில், தீபதிருவிளக்கு பூஜை, விசேஷ பூஜை, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு ஸ்ரீ மகா கணபதி ஹோமம் மற்றும் பூஜைகள், காலை 9 மணிக்கு, ஸ்ரீ குரு மகா யாகம், பூா்ணாஹூதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடைபெறுகிறது.
இரு நாள்களிலும், குரு மகா சன்னிதானம் ஸ்வாமிகள் பங்கேற்று இடப்பெயா்ச்சி சிறப்பு பலன்களை விளக்கி கூறுகிறாா். ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ராசிக்காரா்கள் பரிகாரம் செய்து கொள்வது அவசியம். இந்த பெயா்ச்சி யாகத்தில் அனைவரும் கலந்து கொள்ளலாம், அனுமதி இலவசம். இதற்கான ஏற்பாடுகளை ஓம் ஸ்ரீ சித்தி விநாயகா் சன்னிதானம் நிா்வாகிகள் செய்துள்ளனா்.