சி.பி.எஸ்.இ.பிளஸ் 2 தேர்வு: குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை

 நாமக்கல்  குறிஞ்சி  சீனியர்  செகண்டரி பள்ளி(சி.பி.எஸ்.இ)  மாணவர்கள் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்


 நாமக்கல்  குறிஞ்சி  சீனியர்  செகண்டரி பள்ளி(சி.பி.எஸ்.இ)  மாணவர்கள் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளி மாணவர்  465 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். பள்ளி அளவில், 462 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தையும், 461 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும்  மாணவர்கள் பிடித்துள்ளனர். 460 -க்கு மேல் 3 பேர்,  450 - க்கு மேல் 12 பேர், 400 - க்கு மேல் 21 பேர், 350 - க்கு மேல் 36 பேரும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும், பாடவாரியாக 95 மதிப்பெண்களுக்கு மேல் ஆங்கிலத்தில் மூவரும்,  கணிதத்தில் 5 பேரும், இயற்பியலில் 4 பேரும்,  வேதியியலில் 4 பேரும், உயிரியலில் 7 பேரும், கணினி அறிவியலில் 2 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வில் சாதனை படைத்த அனைத்து மாணவ, மாணவியரையும், பள்ளி தாளாளர் என்.தேவியண்ணன் மற்றும் இயக்குநர்,  முதல்வர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் பாராட்டினர். தற்போது,  சி.பி.எஸ்.இ மற்றும் மாநிலக் கல்விக்குரிய இப்பள்ளியில் கே.ஜி. வகுப்பு முதல் பிளஸ் 1 வரையில் சேர்க்கை நடைபெறுகிறது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இலவச பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. ரீபிட்டர் பேட்ஜ் பயிற்சி வகுப்புகள் ஜூன் 3-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. நீட் மற்றும் ஜேஇஇ, முழு நேர பாட வகுப்புகள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தினசரி நடைபெறுகிறது. தமிழ் வழி மாணவ, மாணவியருக்கு சிறப்புக் கட்டண சலுகை உண்டு. இப்பள்ளியில் ஆண், பெண் என தனித்தனி விடுதி வசதிகள் உள்ளன என அப்பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com