பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.6 லட்சத்து 94 ஆயிரத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.
பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் விளையும் தேங்காய்களை உடைத்து அதன் பருப்புகளை விவசாயிகள் வியாழக்கிழமைதோறும் பரமத்தி வேலூர், வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்துக்கு தகுந்தாற் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 5,840 கிலோ கொப்பரை தேங்காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.90.10- க்கும், குறைந்த பட்சமாக ரூ.84.55 -க்கும், சராசரியாக ரூ.87.55 -க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.4 லட்சத்து 98 ஆயிரத்து 557 - க்கு வர்த்தகம் நடைபெற்றது.
இந்த வாரம் வியாழக்கிழமை (ஜூன் 27) நடைபெற்ற ஏலத்துக்கு 8,698 கிலோ கொப்பரை தேங்காய்கள் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.90.10-க்கும், குறைந்த பட்சமாக ரூ.37.89-க்கும், சராசரியாக ரூ.87.65-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 94 ஆயிரத்து 752 - க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும் ஏலத்துக்கு 115 கிலோ எள் கொண்டுவரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.110.85-க்கும், குறைந்தபட்சமாக ரூ.107 -க்கும், சராசரியாக ரூ.110 - க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.12 ஆயிரத்து 704 - க்கு எள் வர்த்தகம் நடைபெற்றது.