நாமக்கல்

டெங்கு, மலேரியா தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி

29th Jun 2019 09:53 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூரில்  பரமத்தி வட்டார சுகாதாரத் துறை மற்றும் வேலூர் பேரூராட்சி சார்பில் டெங்கு மற்றும் மலேரியா  நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரணியை வேலூர் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார் தொடக்கி வைத்தார். நல்லூர் வட்டார சுகாதாரத் துறை மேற்பார்வையாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். வேலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய பேரணி அண்ணாசாலை, பேருந்து நிலையம் வழியாகச் சென்று மீண்டும் பேரூராட்சி அலுவலகம் வந்தடைந்தது.  இந்தப் பேரணியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேரூராட்சிப் பணியாளர்கள் டெங்கு , மலேரியா காய்ச்சல் தடுப்பு குறித்தும், திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் சிக்கனம்  ஆகியவை குறித்தும்  முழக்கங்களை எழுப்பியும், பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்தப் பேரணியில் 100-க்கும் மேற்பட்ட  தனியார் கல்லூரி மாணவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் குமார், அப்துல் ரஜின், வேலூர் பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT