நாமக்கல்

திறனாய்வுப் போட்டி: பதக்கம் வென்ற மோப்ப நாய்க்கு ஐ.ஜி. பாராட்டு

31st Jul 2019 09:00 AM

ADVERTISEMENT

காவல் துறை பணிக்கான திறனாய்வுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நாமக்கல் மாவட்ட மோப்ப நாய் பவானிக்கு, செவ்வாய்க்கிழமை மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் பாராட்டு தெரிவித்தார்.
 அகில இந்திய காவல் துறை சார்பில் 62-ஆவது தேசிய அளவிலான காவலர்களுக்கான பணி திறனாய்வுப் போட்டி, கடந்த 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை உத்திரபிரதேச மாநிலம், லக்னெளவில் நடைபெற்றது. இதில் துப்பறியும் மோப்ப நாய்களுக்கான வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பிரிவில், நாமக்கல் மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பவானி கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றது.
 துப்பறியும் மோப்ப நாய் பவானி, அதன் கையாளுநர் முதல்நிலைக் காவலர் லோகநாதன் மற்றும் பயிற்சியாளர் தலைமைக் காவலர் சந்திரசேகர் ஆகியோர், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
 மேலும், வெள்ளிப் பதக்கம் வென்ற மோப்ப நாய் பவானி, அதன் கையாளுநர் லோகநாதன் மற்றும் பயிற்சியாளர் சந்திரசேகர் ஆகியோரை கோவை மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் மு.பெரியய்யா, சேலம் சரக காவல் துறை துணை தலைவர் பிரதீப்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு ஆகியோர் பாராட்டினர்.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT