நாமக்கல்

ஆகஸ்ட் 7, 9-இல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு படைப்பாற்றல் போட்டிகள்

31st Jul 2019 09:20 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில் ஆக. 7, 9- தேதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான படைப்பாற்றல் போட்டிகள் நடைபெறவுள்ளன.
 இது தொடர்பாக, ஆட்சியர் மு.ஆசியா மரியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசுத் துறை அலுவலகங்களில், ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெற துணைபுரியும் வகையில், மாவட்டந்தோறும் உள்ள அனைத்துத் துறை அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு, ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
 தற்போது ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறும் பயிலரங்கில், அரசு அலுவலர் மற்றும் பணியாளர்கள் பங்கேற்க வேண்டும்.
 மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில், ஒவ்வோர் ஆண்டும், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், நிகழாண்டுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 7-ஆம் தேதியன்று காலை 9 மணியளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கு, நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள டிரினிடி அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட்
 9-ஆம் தேதியன்று டிரினிடி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் பங்கேற்று வெற்றிபெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT