நாமக்கல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம்

30th Jul 2019 09:36 AM

ADVERTISEMENT

ராசிபுரம் நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் ராசிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.
 இக் கூட்டத்தில் நகரச் செயலாளர் வீர.ஆதவன் வரவேற்றுப் பேசினார். கட்சியின் மாவட்டச் செயலர் பழ.மணிமாறன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் வி.அரசன், மாவட்ட துணைச்செயலர் ஆ.நீலவானத்துநிலவன், தொகுதி செயலர்கள் பெ.செங்குட்டுவன், கோவி.பணரோசா, த.ஆற்றலரசு, துணைச்செயலர் ந.மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கட்சியின் மாநில துணைப்பொதுச் செயலர் வெ.கனியமுதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினார். மக்கள் தன்னுரிமை கட்சி நிறுவனர் நல்வினை செல்வன், மாவட்ட காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் பாச்சல் ஏ.சீனிவாசன், இந்தியன் முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவர் ஒய்.முகமதுமுபின், திராவிடர் கழக மாவட்டச் செயலர் வை.பெரியசாமி, ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலர் வை.பெரியசாமி உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT