நாமக்கல்

அக்கரைப்பட்டி ஏல மையத்தில் ரூ.16 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

30th Jul 2019 08:59 AM

ADVERTISEMENT

ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் அக்கரைப்பட்டி கிளையின் ஏல மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ.16 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போயின.
 பாலப்பட்டி, அக்கரைபட்டி, பொரசல்பட்டி, செளதாபுரம், வெண்ணந்தூர், குசாமிபாளையம், வையப்பமலை, மல்லசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 714 மூட்டை சுரபி ரக பருத்திகளை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தினர். இதில் சுரபி ரக பருத்தி அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 699-க்கும் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 705-க்கும் தரத்துக்கேற்றவாறு ஏலம் போயின. இந்த பருத்திகளை நாமக்கல், திருச்செங்கோடு, அவினாசி, அன்னூர், ஆத்தூர், கொங்கணாபுரம், எடப்பாடி, மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலம் எடுத்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT