நாமக்கல்

மிதமான மழைப் பொழிவுக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

27th Jul 2019 09:04 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் வானம் பொதுவான மேகமூட்டத்துடன், மிதமான மழைப் பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் நான்கு நாள்களுக்கு, வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை 10 மில்லி மீட்டர் பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. காற்று 8 கிலோ
 மீட்டர் வேகத்தில் மேற்கில் இருந்து வீசக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 95 டிகிரியும், குறைந்தபட்சம் 77 டிகிரியுமாக இருக்கும்.
 சிறப்பு வானிலை ஆலோசனை: மிதமான மழைப்பொழிவு மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் மேற்கு உள் மாவட்டங்களில் இருப்பதால் பகல் வெப்பம் குறைந்து காணப்படும். காற்றின் வேகம் தொடர்ந்து அதிகமாகவே இருக்கும். வெப்ப அளவு, காற்றின் வேகம் மற்றும் மழை ஆகியவை கோழிகளில் முட்டை உற்பத்திக்கும், அதன் வளர்ச்சிக்கும் சாதகமானவையாக இருக்கும். இந்த வாரத்தில் தீவன எடுப்பு மற்றும் உற்பத்தி ஆகியவை இயல்பாகவே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT