நாமக்கல்

மாவட்ட அளவில் மகளிருக்கான சிலம்பப் போட்டி

22nd Jul 2019 10:35 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில்,  மாவட்ட  அளவில் மகளிருக்கான சிலம்பப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
தமிழ்நாடு  சிலம்பம் விளையாட்டு சங்கம்,  மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான மகளிர் பங்கேற்ற சிலம்பப் போட்டிகள் நாமக்கல் தனியார் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.  மாவட்டத்  தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். இப்போட்டிகளில், மாவட்டம் முழுவதும் இருந்து 29 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
சப் ஜூனியர்,  ஜூனியர்  மற்றும் சீனியர் என  மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.  அனைத்து பிரிவிலும் முதலிடம் பிடித்த வீராங்கனைகள்,  வரும் ஆக.11-இல் நடைபெறும் மண்டல அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும், வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் மட்டும் அளிக்கப்பட்டது.  இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்கச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT