நாமக்கல்

நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம்

22nd Jul 2019 10:39 AM

ADVERTISEMENT

ஆடி  முதல்  ஞாயிற்றுக்கிழமையையொட்டி,  நாமக்கல்  ஆஞ்சநேயர் சுவாமிக்கு, 1,008 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
நாமக்கல்லில்  அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமிக்கு,  ஒவ்வொரு மாதமும் தமிழ் முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை,  பௌர்ணமி ஆகிய தினங்களில் சிறப்பு அபிஷேகம்,  அலங்காரங்கள் நடைபெறும். அதன்படி, ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமிக்கு காலை 9 மணியளவில் வடை மாலை சாத்துப்படி அலங்காரம்
நடைபெற்றது. 
அதனைத் தொடர்ந்து, காலை 11 மணிக்கு 1,008 லிட்டர் பால்,  தயிர், தேன், பஞ்சாமிர்தம்,  திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால்  சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து வெற்றிலை, துளசி மாலைகள் அணிவித்து சொர்ணாபிஷேகம் நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆடி  முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாமக்கல் மட்டுமின்றி சேலம்,  கரூர்,  ஈரோடு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமியைத் தரிசிக்க வந்திருந்தனர். அதிகாலை முதல் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT