நாமக்கல்

கார் மோதியதில் தொழிலாளி பலி  

22nd Jul 2019 10:35 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி அருகே  தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை கார் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
பரமத்தி அருகே உள்ள ஜங்கமநாயக்கன்பட்டியைச்  சேர்ந்தவர் பெரியசாமி (58).  இவர் பரமத்தி அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தனது இரு சக்கர வாகனத்துக்கு  பெட்ரோல் நிரப்பிக் கொண்டு பரமத்தி அருகே உள்ள மரவாபாளையம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில்  வந்துள்ளார். அப்போது கரூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற கார்  பெரியசாமி மீது மோதியது.  இதில்  படுகாயமடைந்த பெரியசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
இந்த விபத்து குறித்து பரமத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து சேலம் களரம்பட்டியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சீனிவாசனை (35) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT