நாமக்கல்

வாள் சண்டைப் போட்டி: நாமக்கல்லில் இன்று தொடக்கம்

19th Jul 2019 02:03 AM

ADVERTISEMENT


 நாமக்கல்லில் மாநில அளவிலான வாள் சண்டைப் போட்டி வெள்ளிக்கிழமை(ஜூலை 19) தொடங்கி,  மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
தமிழ்நாடு வாள் சண்டை கழகம்,  நாமக்கல் மாவட்ட வாள் சண்டை சங்கம் ஆகியன இணைந்து, மாநில அளவிலான வாள் சண்டைப்  போட்டியை நடத்துகின்றன.
நாமக்கல் செல்வம் கலை அறிவியல் கல்லூரியில்  வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கி,  ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 21) வரை நடைபெறும் இப்போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 
போட்டியை ஆட்சியர் மு.ஆசியா மரியம் தொடக்கி வைக்கிறார். வாள் சண்டை கழக நிறுவனர் பி.செல்வராஜ், தலைவர் ஒய்.ஜான்நிக்கல்சன், செயலர் ஏ.ராமசாமி,  துணைத்தலைவர் பி.செல்லதுரை உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். 
இதையடுத்து,  நிறைவு விழாவுக்கு முன்னாள் துணைவேந்தரும், வாள் சண்டை கழகத் துணைத் தலைவருமான பி.செல்லதுரை தலைமை வகிக்கிறார்.  காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு   செல்வம் கல்வி நிறுவனச் செயலர் கவீத்ரா நந்தினிபாபு, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொதுச் செயலர் ஜே.எம் பெர்னாண்டோ உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT