நாமக்கல்

ஜேகேகே நடராஜா கல்வி நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

16th Jul 2019 09:19 AM

ADVERTISEMENT

குமாரபாளையம் ஜேகேகே நடராஜா கல்வி நிறுவனமும், சேலம் கிரீன் கனெக்ட் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனமும் கழிவுகள் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்பாடு தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
 இந்த ஒப்பந்தம் மூலம் இக்கல்வி நிறுவனத்தில் மாணவ, மாணவியருக்கு கழிவுகளை கையாளுதல் குறித்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
 மேலும், கழிவுகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து சுற்றுசூழலைப் பாதுகாத்தல், எளிய முறையில் மழை நீர்சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துதல், தண்ணீரை சேமிக்கும் முறைகள், நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் போன்றவையும் கற்பிக்கப்படுவதோடு செய்முறை பயிற்சியும் அளிக்கப்படும்.
 இப்பயிற்சி பெறும் மாணவர்கள் இதே நிறுவனத்தில் வாடிக்கையாளர் ஆலோசனை நிபுணர்களாக பணிகளைத் தொடரலாம்.
 கல்லூரியின் பொறியியல் மற்றும் அறிவியல் துறை மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளுக்கு இந்நிறுவனம் தொழில்துறை ஆலோசகராகவும், தேவையான வழிகாட்டுதலையும் வழங்கும்.
 ஜேகேகே நடராஜா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.செந்தாமரை, நிர்வாக இயக்குநர் எஸ்.ஓம் சரவணா ஆகியோர் முன்னிலையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் க.தமிழரசு, கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பி.சரஸ்வதி, கிரீன் கனெக்ட் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர் சைதன்யன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, பரிமாறிக் கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT